Home /News /education /

ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

School Reopen : ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள் வழங்கும் திட்டம் ஆசிரியர்களுக்கான மின்பதிவேடுகள், ஆசிரியர்களுக்கான பணிப்பலன் செயலி, கல்வியாண்டிற்கான நாட்காட்டி. ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி . ஆகியவற்றை  வழங்கும் விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

    பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20ல் இருந்து 12ம் வகுப்புகள் தொடங்கப்படும்  என்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    1ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Must Read : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை - சமூக ஆர்வலர் மேதா பட்கர்

    அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023 மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, School Reopen

    அடுத்த செய்தி