• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கொரோனா பரவல் காரணமாக மக்களிடம் வருமானம் குறைந்ததால், பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர் என தகவல்கள் வெளியாகின.

  • Share this:
    கடந்த 10 ஆண்டுகளில்  1-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை 15-லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    2020-21-ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ்-டூ மாணவர்களுக்கு நேரடியாக பொதுத் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், வல்லுநர் குழு அமைத்து, அவர்களின் பரிந்துரையின் படி மதிப்பெண் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, பத்தாம் வகுப்பை அடிப்படையாக கொண்டு 50 சதவீதமும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் 20 சதவீதம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு 30 சதவீதம் என கணக்கிடப்பட்டு 100 மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிளஸ்-டூ தேர்வு முடிவு வெளியாகியது.

    சென்னை டிபிஐ வளாகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் விவரத்தை குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் முறையை தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2020-21-ம் கல்வியாண்டில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.

    இந்நிலையில், இந்த மதிபெண்ணில் திருப்தியில்லாத மாணவர்களுக்கு தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோர் மாதத்தில் கொரொனோ சூழலை பொருத்து நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும், 10ம் வகுப்பு மதிப்பெண்ண் சான்றிதழ் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், அறிவியல் பாடப்பிரிவில் 551-600 மதிப்பெண் விகிதத்தில் 30 ஆயிரத்து 60 பேர் தற்போதைய நடைமுறையில் தேர்சி அடைந்துள்ளனர். தேர்வு நடைபெற்று இருந்தால் 1867 பேர் மட்டுமே 551-600 ல் பெற்றிருப்பார்கள். 11ஆம் வகுப்பில் அரியர் வைத்த 33ஆயிரத்து 557 மாணவர்கள் அனைவரும் தேர்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 551-600 மதிப்பெண் பெற்றவர்கள் 8,909. தேர்வு நடைபெற்றிருந்தால் 4,437 மட்டுமே 551-600 மதிப்பெண்களை பெற்றிருப்பார்கள்.

    கலை பாடங்களில் 551-600 மதிப்பெண் பெற்றவர்கள் 35 பேர். தேர்வு நடந்திருந்தால். 5 பேர் மட்டுமே இந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள். தொழிற்கல்வி பாடங்களில் 136 பேர் 551-600 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு நடந்திருந்தால் 50 பேர் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.” என்று கூறினார்.

    இந்நிலையில், ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    Must Read : 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை!

    கொரோனா பரவல் காரணமாக மக்களிடம் வருமானம் குறைந்ததால், பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்குச் சென்றிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: