ஹோம் /நியூஸ் /கல்வி /

சுழற்சி முறை இல்லாமல் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சுழற்சி முறை இல்லாமல் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

School : தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான 15 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வகுப்புகள் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிற மாநிலங்களில் 1ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாணவர்கள் நலன்கருதி சிறப்பாக செயல்படுத்தி காட்டுவோம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று 2ஆம் அலை முடிவுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்பொழுது, நடைமுறையில் இருந்த சுழற்சி முறை போல் இந்தமுறை பள்ளி வகுப்புகள் செயல்படாது. வழக்கம் போலவேதான் வகுப்புகள் செயல்படும்.

Read More : ஊரடங்கில் நீட்டிக்கப்பட்டுள்ள தடைகள் என்னென்ன?

காலம் குறைவாக இருப்பதால் எங்களது நோக்கம் பள்ளியின் பாடம் திட்டம் முழுவதையும் விரைவில் முடிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் நடத்தப்பட்டும். மே முதல் இரண்டாவது வாரத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றார்.

Must Read : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு... தேர்தலில் எவ்வளவு செலவிடலாம்?

மேலும், தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான 15 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, School, School Reopen