10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாத இறுதியில் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக, தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் மாணவி பயின்ற பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், காரணம் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக, முதற்கட்டமாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
Must Read : எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
10ஆம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.