• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • குழந்தைகளை பள்ளிக்கு வரச் சொல்லி வற்புறுத்தக் கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

குழந்தைகளை பள்ளிக்கு வரச் சொல்லி வற்புறுத்தக் கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாதிரி படம்

மாதிரி படம்

நாம் மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச்சொல்லவில்லை. மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்க வேண்டும்.

  • Share this:
    1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் அல்லது 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளோம் என்றும் குழந்தைகளை பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 28 அறிவிப்புகளை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகள் மிக வேகமாக செயலாற்றி வருகிறார்கள். இது பெருமையான விஷயம். மானியக் கோரிக்கை அறிவிப்பில் எதற்கெல்லாம் பாராட்டு பெற்றோமோ?, அந்த அறிவிப்பில் எதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை மையப்படுத்தி தான் எதிர்கட்சிகளின் கேள்விகள் இருக்கும்.

    எனவே, அந்த வகையில் அதிகாரிகளின் செயல்பாடு, அவர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும் என்ற வகையில் ஓடிக்கொண்டு இருக்கிறோம். முதலமைச்சரை சந்தித்து, பள்ளிகள் திறப்பு குறித்து அறிக்கை கொடுத்திருக்கிறோம். அப்போது முதலமைச்சரிடம் நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ? அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறோம். முதலமைச்சர் பொது சுகாதாரத்துறை ஆலோசனையை கேட்டு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளை, தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்லக்கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதுதொடர்பாக சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரை உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப சொல்லி இருக்கிறோம். குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்லக்கூடிய காலம் இதுவல்ல. நம்முடைய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூட, நாம் மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச்சொல்லவில்லை. மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும், முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் இருக்கிறது.

    குழந்தைகளை பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம். முதலமைச்சர் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவெடுக்கும்போது வல்லுனர் குழுவோடு ஆலோசித்து எப்படி முடிவு எடுப்பாரோ? அதுபோன்ற முடிவை எப்போது எடுத்து முதலமைச்சர் எங்களுக்கு அறிவிக்கிறாரோ? அதன் அடிப்படையில்தான் பள்ளிக் கல்வித்துறையின் முடிவும் இருக்கும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் அல்லது 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரைத்து இருக்கிறோம்.

    Must Read : ரோல்ஸ் ராய்ஸ் கார், அமெரிக்க டாலர், வைர நகைகள்... முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

    இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம். பணம் கட்டி படிப்புகளை பெறும் மாணவர்கள் மத்தியில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்குவதற்கு அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 148 மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: