ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?... இன்று முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?... இன்று முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Summer Holidays : முன்கூட்டியே தொடக்க பள்ளிக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துளளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைகளின் திறமையை கண்டறியும் பணி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு என்றும் பெற்றோர்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள் எனவும் கூறினார்.

  பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், 5 ஆம் தேதி (நாளை) பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அணிய வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் ஆரம்பிக்கும் பொழுது வந்த வழிகாட்டுதலாகும்.

  தற்போதைய புதிய வழிகாட்டுதலில் தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக தேர்வு நடத்துகிறோம் என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், கத்திரிவெயில் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  நிறைய பள்ளி குழந்தைகள் ஆல் பாஸ் செய்யுங்கள் என கேட்கும் போது கூட, நான் ஆல் பாஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன். கட்டாயம் தேர்வு தான் என்பதே என் நிலைபாடு. மாணவர்கள் நலன் கருத்தி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

  Must Read : உதயநிதிக்கு அமைச்சர் பதவி.? அதிரடி அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் திமுக அரசு!

  தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒற்றை ஆசிரியர் உள்ள பள்ளியை தமிழகத்தில் மூட அரசு விரும்பவில்லை என்றும், எனவே ஒரு மாணவர் படித்தாலும் பள்ளி இயங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார். அதேபோல, தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடைவிடுமுறை அளிப்பது குறித்து (இன்று) முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Anbil Mahesh Poyyamozhi, School Holiday, Summer Vacation