Home /News /education /

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் பிரச்சினை எங்கும் இல்லை. அனைவரையும் சகோதரத்துவத்துடனே பார்க்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் பிரச்சினை எங்கும் இல்லை. அனைவரையும் சகோதரத்துவத்துடனே பார்க்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

திமுக அரசு அமைந்த கடந்த, 9 மாதத்தில் இடைநின்ற குழந்தைகள் 1.80 லட்சம் பேரை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, "கடந்த, 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை (RTI) அடிப்படையாக கொண்டது தான் பள்ளி மேலாண்மைக்குழு. இதுவரை கண்டுக் கொள்ளாமல் இருந்த இந்த திட்டத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

    பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கம். திமுக அரசு அமைந்த கடந்த 9 மாதத்தில், 1.80 லட்சம் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம்.

    கல்வியும், சுகாதாரமும் இருகண்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். அதனால் தான் பட்ஜெட்டில் அதிகபட்சமாக, 36,000 கோடி ரூபாய் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 4,300 கோடி ரூபாய் அதிகம்" என்றார்.

    கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு


    தொடர்ந்து, பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘தேனியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நான்கு நாட்கள் முன்பு முடிந்த விஷயம் என்றாலும், ஆசிரியர்- மாணவர்கள் என இருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம்.

    இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வண்ணம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் பிரச்சினை எங்கும் இல்லை. அனைவரையும் இங்கு சகோதரத்துவத்துடனே பார்க்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு தமிழ்நாடு" என்றார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, DMK, Education

    அடுத்த செய்தி