• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது

நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது

 கோப்பு படம்

கோப்பு படம்

நடப்பு கல்வியாண்டில் வழக்கம்போல் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் சேது ராம வர்மா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரொனோ காரணமாக 2020ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் எடுத்திருந்த மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 2021 கல்வியாண்டில் 10, 11 ,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர்.

    நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்குரிய புதிய தேர்வு மையங்களை அமைப்பதற்கு உரிய கருத்துக்களை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் சேது ராம வர்மா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்வு மையங்களாக செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் புதிதாக தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகளின் விவரங்களை அனுப்பவும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    Also Read : நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகுமா? 

    10 கிலோமீட்டர் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வெழுதும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கவும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாத பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. புதிய தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகள் அரசின் தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை சுட்டிக்காட்டி அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: