Home /News /education /

BYJU’S Young Genius சீசன் 2 க்காக, ஒரு உணர்ச்சிகரமான, என்ரிச்சிங் த்ரோபேக் அதன் இறுதி எபிசோடில் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கிறது.!

BYJU’S Young Genius சீசன் 2 க்காக, ஒரு உணர்ச்சிகரமான, என்ரிச்சிங் த்ரோபேக் அதன் இறுதி எபிசோடில் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கிறது.!

Byjus

Byjus

Byjus Young Genius2 | எபிசோடின் மிகவும் பரபரப்பான பகுதி என்னவென்றால், இந்தப் பகுதி இளம் மேதைகள் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட தனி எப்பிசோடில் இறுதிக் கட்டத்தை கட் செய்யாத சில காணப்படாத காட்சிகளை முன்னிலைப்படுத்தியது.

கடந்த சில வாரங்களாக BYJU's Young Genius சீசன் 2  நமக்கு வழங்கிய ஆழமான, அர்த்தமுள்ள தாக்கங்களை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு வாரமும், தொகுப்பாளர் ஆனந்த் நரசிம்மன், இந்தியா முழுவதிலும் உள்ள இளம் மேதைகளை ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிரபல விருந்தினர்களுடன், அவர்களால் வளர்க்கப்பட்டு, கவரப்பட்ட இந்தியாவின் இளம் தலைமுறையின் கண்டுபிடிப்பு அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அனைத்து முந்தைய எப்பிசோட்களின் ஒரு பெரிய த்ரோபேக் மற்றும் ரீகேப்பில், நரசிம்மன் #BYJUSYoungGenius2 யின் மிகவும் நேசத்துக்குரிய சில தருணங்களை உணர்வுகளுடன் நினைவூட்டுகிறார்.

இசையமைப்பாளரும் பாடகருமான சலீம் மெர்ச்சண்ட் பாடிய முழுமையான தீம் பாடலுடன் எப்பிசோட்டுடன் தொடங்குகிறது. நரசிம்மன் கடைசியாக BYJU's Young Genius season 2 ஸ்டுடியோவில் நுழையும் போது, இந்த சீசனில் காட்சிப்படுத்தப்பட்ட இளம் மேதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நிகழ்ச்சியின் நடுவர்கள் ஆற்றிய முக்கியப் பங்கை அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.

நடுவர்களைப் பொறுத்தவரை, நிகழ்ச்சி மற்றும் அதன் வடிவமைப்பை வாழ்த்தி எழுத்தாளர் அமிஷ் திரிபாதி கூறும்போது, இளம் மேதைகளிடம் காணப்பட்ட சில திறமைகள் அவரை பிரம்மிக்கச் செய்ததை அவர் ஒப்புக்கொள்கிறார். இசையமைப்பாளர் ஷங்கர் மகாதேவன் கூறுகையில், சில இளம் மேதைகள் உண்மையில் மனிதநேயத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள், இந்த இளம் வயதில் இது அவர்களிடம் காணப்படும் ஒரு ஊக்கமளிக்கும் சாதனை எனக் கூறினார்.

நரசிம்மன் அவர்கள் நிகழ்ச்சியில் தோன்றிய இளம் மேதைகளின் வீடியோக்களை ஒளிபரப்பி, அவர்களின் திறமைகளால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். உலக கிக் பாக்ஸிங் சாம்பியனான தஜாமுல் இஸ்லாமின் ஹை கிக்ஸ் அல்லது மல்யுத்தத்தில் தேசிய தங்கப் பதக்கம் வென்ற சஞ்சலா குமாரி தன்னை விட 20 கிலோ எடையுள்ள தனது ஐடெலான கீதா போகத்தை தூக்கியது, அல்லது சித்தார் மேஸ்ட்ரோ ஆதிராஜ் சௌதுரி ஒரு நிமிடத்தில் 600 நோட்களை வாசித்தது என ஒவ்வொன்றும் சிறிய தருணங்களாக இருந்தாலும் பிரம்மிப்பானதாக இருந்தது.இவர்களின் சாதனைகளை நாம் பலமுறை திரும்ப திரும்ப பார்த்தாலும், நமக்கு சளிப்பை ஏற்படுத்தாது. இந்த இளம் மேதைகளுக்கு, அவர்களின் ஐடெல்களைப் பார்ப்பது அவர்களின் ரியாக்ஷன்களை அறிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக இருந்தது. மேலும், BYJU's Young Genius சீசன் 2 யின் முழு சீசனிலும் வெவ்வேறு தருணங்களில் அவர்களின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியைப் பாருங்கள்.

சஞ்சலா குமாரியின் ஐடெலான  கீதா போகத் உள்ளே நுழைந்ததும் சஞ்சலா வியந்த விதம், வித்யுத் ஜம்வாலைப் பார்த்ததும் களரிப்பயற்று வீரரான நீலகண்டன் நாயரின் கண்கள் பிரகாசித்த தோரணை, ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையான லோவ்லினா போர்கோஹைன் உள்நுழைந்த போது தஜாமுல் முகத்தில் காட்டிய வியப்பு ஆகியவை எப்பிசோடின் விலைமதிப்பில்லா தருணங்களுக்குச் சாட்சிகளாக உள்ளன.

#BYJUSYoungGenius2 யின் இந்த சீசன் நிறைய உணர்ச்சிகரமான தொகுப்புகளையும் கொண்டிருக்கிறது, குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் இளம் மேதைகள் குறித்து எவ்வளவு பெருமிதம் கொள்கிறார்கள் என்பது உட்பட. தன் மகள் இத்தாலிக்குப் போனபோது அழுதுகொண்டு பேசிய தாஜாமுலின் அப்பா அவள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் நிகழ்வு, கிளாசிக்கல் டான்ஸர் நிலா நாத்தின் அப்பா, நிலாவின் அம்மா இறந்தபோது மூன்று வயதில் நடனம் ஆடத் தொடங்கிய தனது மகளைப் பற்றி பேசிய நிகழ்வு மற்றும் ஏராளமான பிற பெற்றோர்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகளுடன் இந்தப் பகுதி கண்ணீரை வரவழைப்பதோடு, இளம் மேதைகளின்  திறனை உலகிற்கு அங்கீகரிப்பதிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் பெற்றோர்கள்தான் முதல் பங்கு வகிக்கிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

நிகழ்ச்சியில் தோன்றும் இளம் மேதைகளை நாம் எவ்வளவு பாராட்டுகிறோமோ, அந்த அளவிற்கு அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக அவர்களின் பெற்றோர்கள்தான் முதல் கைத்தட்டலைப் பெறுவதற்கும் பாரட்டப்படுவதற்கும் தகுதியுடையவர்கள்.

சில மேதைகளின் வினோதமான குறும்புத்தனங்களை மற்றொரு பகுதி வெளிப்படுத்தும்போது, நமது உணர்வு விரைவாக கண்ணீரிலிருந்து மகிழ்ச்சியாக மாறுகிறது. நீச்சல் வீரரான ஜெய் ஜஸ்வந்திடம், "நீங்கள் கடலில் நீண்ட தூரத்தை எப்படி கடக்கறீர்கள்" என்று கேட்டதற்கு, இட்லி தோசைதான் காரணம் என அவர் கூறிய பதிலும், அப்துல் குவாதிர் இந்தோரி தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை விளையாட்டாக ஏமாற்ற தனது அப்பாவி முகத்துடன் பெரிய கதைகளை அசால்டாக கூறுவேன் என்று கூறியதும் நம்மை ரசிக்க வைத்தது.

எப்பிசோடின் மிகவும் பரபரப்பான பகுதி என்னவென்றால், இந்தப் பகுதி இளம் மேதைகள் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட தனி எப்பிசோடில் இறுதிக் கட்டத்தை கட் செய்யாத சில காணப்படாத காட்சிகளை முன்னிலைப்படுத்தியது.

இதில், அறிமுக நகர்வை எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்று தஜாமுல் லோவ்லினாவிடம் காண்பித்த நிகழ்வு, நீலகண்டனின் ஸ்டிக் வொர்க, வித்யுத்தை அதில் சேர தூண்டியதோடு, அவரது திறமைகளை வித்யுத்தை பாராட்ட செய்த நிகழ்வு மற்றும் இளம் பண்பியல் ஓவியர் அத்வைத் கோலார்கர் நிகழ்ச்சியின் போது பண்பியல் கலையின் முழு ஓவியத்தையும் உருவாக்கிய நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் அடங்கும்.

உண்மையைச் சொல்லப்போனால், போர்டு கேம்ஸ் வடிவமைப்பாளரான வீர் காஷ்யப், நடிகை மௌனி ராயுடன் கார்டு விளையாடியது, அனைவரையும் கவர்ந்த தருணமாக இருந்தது, எங்களுக்குப் பிடித்தமான தருணமும்கூட!

இவ்வளவு அதிகமான தொகுப்புகளுடன், BYJU's Young Genius சீசன் 2 யின் கடைசி எப்பிசோட், முழு சீசனின் சில சிறந்த தருணங்களை மீட்டெடுப்பதற்காக மட்டுமே பார்க்க வேண்டுமென்று இல்லை. நாம் அனைவரும் இந்த இளைஞர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, அற்புதங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு நம் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை இன்னொரு முறை உணர்ந்துகொள்வதற்காகவும்தான். BYJU's Young Genius அடுத்த சீசன் வருவதற்குள் இந்த கடைசி எப்பிசோடை காணத் தவறாதீர்கள். முழு நீட்டிக்கப்பட்ட எப்பிசோடையும் இங்கே காணுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: BYJU'S Young Genius, Education

அடுத்த செய்தி