Home /News /education /

12ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை!

12ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான தகுதியை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் எந்த துறையும் விதிவிலக்கானதல்ல.

உலகம் பொருளாதார நெருக்கடியில் சிச்சித் தவிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள காலம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக உலக மக்களின் வேலை வாய்ப்புகளும், வேலையின் தன்மையும் மாறி இருக்கின்றன. கொரோனா மூன்றாம் அலையின் அச்சம் ஒருபுறம் மக்களை பீதியடையச் செய்து வருகிறது.

கல்வி கற்பது பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே நடைபெறுகிறது. அதேபோல வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. வேலை இழப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரு வகை குழப்பம் நிலவுவதையும் காணமுடிகிறது. கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு இந்த குழப்பம் அதிகமாகவே காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு, கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படித்த பலர் வேலை வாய்ப்பு இன்றி இருப்பதும், கொரோனா காலத்தில் வருமானம் இழந்த பெற்றோர்களின் பொருளாதார இழப்பும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆயினும், பொறியியல் படித்த அனைவருமே வேலை இன்றி இருப்பதில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நாம் சமூகமாக சேர்ந்து வாழ்கிறோம். வாழ்க்கை என்பது அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது. இங்கே உணவும் வேண்டும். மருத்துவமும் வேண்டும், ஆசிரியர்களும் வேண்டும், கலைஞர்களும் வேண்டும், தொழிற்சாலைகளும் வேண்டும், கணிதவியலாளர்களும், விஞ்ஞானிகளும் வேண்டும் இவ்வாறாக சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நபர் ஒருநாளில் எத்தனை துறைகளின் சமூக உறவுகளோடு இணைந்து வாழ்கிறோம் என்பதை கவனித்துப் பார்த்தால் நமக்கு பல்வேறு உண்மைகள் புலப்படும். மின்சாரம் இன்றி நம்மால் இருக்க முடியுமா? கலைகளை கண்டுகளிக்காமல், பாடல்களைக் கேட்காமல் நாட்கள் நகர்கின்றனவா? ஆக, அனைத்து துறைகளுமே அத்தியாவசியத் துறைகள்தான்.

நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். படிப்பது என்பது பணம் சாம்பாதிப்பதற்கானதாக மட்டும் பார்க்கக்கூடாது. அது சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை தீர்த்து வாழ்க்கையை எளிமையாகக் கொண்டு செல்வதற்கானதாக, இலகுவாக்குவதற்கானதாக இருக்க வேண்டும். எனவே மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதில் ஆழமான அறிவைப் பெறுவதுதான் முக்கியமானது. சமீபத்தில் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எப்) ஓர் கருத்தை முன்வைத்திருந்தது. வேலையில் சேருபவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து சிக்கல்களுக்கு உரிய தீர்வைக் காணும் ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்துடன் இருப்பதில்லை. தங்கள் துறைசார்ந்த போதிய திறமைகளை பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, இந்தியாவில் இந்த போக்கு அதிகமாக காணப்படுன்றது. எனவே அதற்கு ஏற்றார்போல கல்விமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

Tamil Nadu 12th Result 2021 | ப்ளஸ் 2 ரிசல்ட் எப்படி பார்ப்பது? எளிய வழி...

எனவே, உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான தகுதியை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் எந்த துறையும் விதிவிலக்கானதல்ல. சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில் நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்காக அனைவருமே இந்தத் துறையை தேர்ந்தெடுத்தால், அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமா? வேளாண் விஞ்ஞாளிகள் தேவை இல்லையா?, நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி என்று சொல்லப்படுகிறது. அதற்கான பொருளாதார நிபுனர்கள் வேண்டாமா?

Must Read : Tamil Nadu 12th Result 2021 பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியீடு...

ஆகவே, மாணவர்கள் தங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருகிறதோ அந்த படிப்பில் சேர்ந்து அதில் ஆழங்கால் பெற்றால் வேலை வாய்ப்பும் நிச்சம் கிடைக்கும். சமூகத்தின் சிக்கல்களும் தீர்க்கப்படுவதற்கு வழிவகை ஏற்படும். பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்தையும், ஆர்வத்தையும் கணக்கில் கொண்டு, விருப்பம் இல்லாத பாடங்களை படிக்க வற்புறுத்தாமல், பிள்கைகளை வழிநடத்தி, மேற்கொண்டு படிப்பதற்கு ஊக்குவித்தால், அதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு துறைசார்ந்த ஆழமான அறிவுடன் திகழ்ந்தால் நிச்சயம் வேலை வாய்ப்பும் தேடிவரும்.
Published by:Suresh V
First published:

Tags: 12th Exam results, College, Jobs

அடுத்த செய்தி