Home /News /education /

அமிர்தா பல்கலைக்கழகம்… இப்போது இந்தியாவிலேயே 5வது சிறந்த கல்வி நிறுவனம்… பெற்றது NAAC-யின் A++ அங்கீகாரம்!

அமிர்தா பல்கலைக்கழகம்… இப்போது இந்தியாவிலேயே 5வது சிறந்த கல்வி நிறுவனம்… பெற்றது NAAC-யின் A++ அங்கீகாரம்!

Amrita University

Amrita University

Amrita University | அமிர்தாவின் அனைத்து கல்லூரிகளும் கல்வி கற்க ஏற்ற பசுமையான சூழலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொள்கை, ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளைப் பொறுத்தவரையில் இவ்வனைத்து கல்லூரிகளிலும் எவ்வித மாறுதலும் இன்றி சிறந்த சேவையை வழங்குகின்றன.

மேலும் படிக்கவும் ...

மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது அமிர்தா பல்கலைக்கழகம். காரணம், இந்திய உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடும் NAAC அமைப்பின் உச்சபட்ச அங்கீகாரமான A++ ரேங்கிங் பெற்றிருக்கிறது அமிர்தா!


NIRF தரவரிசையில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி மையங்கள் என்ற பட்டியலில் 5வது இடம் பிடித்திருக்கிறது. அதேபோல, THE இம்பேக்ட் ரேங்கிங்ஸ் பட்டியலில் சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் 81வது இடத்தைப் பெற்றுள்ளது.


கோவை, சென்னை, அமிர்தபுரி, கொச்சி, பெங்களூர் மற்றும் மைசூரில் இயங்கி வரும் அமிர்தா பல்கலைக்கழகத்தின் வளாகங்களுடன் பரிதாபாத் மற்றும் அமராவதி ஆகிய இடங்களிலும் புதிய வளாகங்கள் வர இருக்கின்றன...


அமிர்தாவின் அனைத்து கல்லூரிகளும் கல்வி கற்க ஏற்ற பசுமையான சூழலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொள்கை, ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளைப் பொறுத்தவரையில் இவ்வனைத்து கல்லூரிகளிலும் எவ்வித மாறுதலும் இன்றி சிறந்த சேவையை வழங்குகின்றன.


"வாழத் தேவையான பாடங்களும், வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் சொல்லித் தருவதுதான் அமிர்தாவின் பெருமை" என்கிறார் டாக்டர் வெங்கட் ரங்கன், துணை வேந்தர், அமிர்தா பல்கலைக்கழகம்.உதாரணமாக அமிர்தாவின் லிவ்-இன் லேப்கள் மூலம் கிராமத்து மக்களின் பிரச்னைகளை மாணவர்களால் உணர்ந்து அவற்றுக்குத் தீர்வு தர முடிகிறது. இதனால் மொத்தம் 2 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். 40 சர்வதேச கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 400 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


"அமிர்தாவில் கருணை என்பது மனதளவில் மட்டுமல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும் என்று முயல்கிறோம்." என்கிறார் டாக்டர் ரகுராமன், தலைவர், ஸ்கூல் ஆஃப் பிசினஸ். "எங்களின் அனைத்து துறைகளிலும் இதனையே செயல்முறைப்படுத்தியுள்ளோம்." 
அமிர்தாவின் 30 ஆராய்ச்சி மையங்களில் இருந்து 1000-ற்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் உலக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். 2016-2021-ல் 59800+ ஆராய்ச்சி கட்டுரைகள் 12050+ வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. உதாரணமாக நிலச்சரிவைக் கண்டுபிடுக்கும் வயர்லெஸ் சென்சார் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இதேபோல தொலைதூர கடல் பயணத்தின் போது மீனவர்களுக்கு உதவ ஓஷன்நெட் இணைய இணைப்பு உதவுகிறது. பிரெயின் கேன்சர் சிகிச்சைக்கு உதவும் நானோ பாலிமர் வேஃபர்கள், தேங்காய் பறிக்கும் கோகோபாட் என்று நிறைய கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்வில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் முயற்சியான The Amrita Center for Research in Analytics, Technologies & Education (Amrita CREATE) அமைப்பு, ஐக்கிய நாடுகள் அவையின் 4வது நிலையான வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் இயங்கி வருகிறது. எல்லோருக்குமான இந்தக் கல்வி தொழில்நுட்ப முயற்சி மூலம், 21 மாநிலங்களில் 12000 பள்ளிகளைச் சேர்ந்த 50000+ ஆசிரியர்கள் மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் அறிவை அதிகரித்துக்கொள்ள ஆன்லைன் கல்வித் தீர்வினை வழங்கியுள்ளது. பெருந்தொற்றின்போது பள்ளிகளில் உள்ள லேப்ஸ் இயங்காததால், CREATE-ன் ஆன்லைன் லேப்ஸ் மூலம் 34 லட்சம் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வகையில் அமிர்தா ஸ்கூல் ஆஃப் பயோடெக்னாலஜி விலை குறைவான இன்சுலின் பம்ப் மற்றும் நொதிகள் அல்லாத குளுக்கோஸ் சென்சார்ககளை உருவாக்கியுள்ளது (இதன் யு.எஸ். காப்புரிமை விப்ரோ டெக்னலாஜிஸ் நிறுவனத்திடம் உள்ளது).
அம்மாச்சி லேப்ஸ் (AMMACHI labs) திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான கிராமத்து பெண்கள் சொந்தக் காலில் நிற்க பலவிதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை போதிக்கும் வகையில்  இந்தியாவிலேயே முதன்முறையாக யுனெஸ்கோ அமைப்பின் பிரத்தியேக துறை அமிர்தாவில் இயங்கி வருகிறது.


பல சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் கைக்கோத்து இயங்கி வருகிறது அமிர்தா, இதனால் அனைத்து நாடுகளில் நிகழும் முன்னேற்றங்கள் நமக்கும் கிடைக்கின்றன!


வேலைவாய்ப்பில் சர்வதேச தரம்


கூகுள், சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் அமிர்தாவிலிருந்து படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களை பணியமர்த்த ஆர்வம் காட்டுகின்றன! அதிகபட்சமாக வருடத்துக்கு 65 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் வேலைகளில் மாணவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.


"நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு உலகளாவிய பார்வை கொண்டுள்ளீர்கள் என்பதையே பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதனை உடைய அமிர்தா மாணவர்களை அவர்கள் விரும்பி பணியமர்த்திக்கொள்கின்றனர்." என்கிறார் அமிர்தாவின் முன்னாள் மாணவரும், டெஸ்லா கார்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருமான தேஜஸ் மேனன்.


சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அறிஞர்கள், முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர்கள் அடங்கிய 50000 நபர்களைக் கொண்ட இயக்கமாக திகழ்ந்து வருகிறது அமிர்தா பல்கலைக்கழகம்."வாழ்க்கையும் வாழ்வதும் ஒன்றல்ல. வாழ்வதற்கு வேலை, பணம், கார் மற்றும் பல சொகுசுகளை வேண்டுகிறோம். ஆனால், வாழ்க்கைக்கோ, எண்ணத்திலும் செயலிலும் அன்பு, கருணை, பக்குவம் ஆகியவை முக்கியம்!" என்கிறார் அமிர்தா பல்கலையின் வேந்தர் மாதா அமிர்தானந்தமயி தேவி!


அமிர்தா பல்கலையின் படிப்புகள், சர்வதேச கல்வி மையங்கள் உடனான கூட்டு முயற்சி, வளாகங்கள், மாணவர் சமூகம் மற்றும் பிற தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்!


Promoted Content
Published by:Selvi M
First published:

Tags: Education, University

அடுத்த செய்தி