ஹோம் /நியூஸ் /கல்வி /

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை - அதிரடி உத்தரவு

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை - அதிரடி உத்தரவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி கிடையாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

  கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள், மற்றும் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன.

  இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

  அதன் அடிப்படையில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

  இதற்கிடையில், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும், அவர் சார்ந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  Must Read : பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை

  ஆகவே இதில் கவனம் செலுத்தி ஏதேனும் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களை தடுப்பூசிபோட அறிவுறுத்துமாறு அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அத்துடன், எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona Vaccine, News On Instagram, School education, School Reopen