நீட், ஜே.இ.இ தேர்வுகளை தவறவிட்ட மாணவர்கள்: மாணவர் அமைப்புகள் சார்பாக பொதுநல மனு..

நீட், ஜே.இ.இ தேர்வுகளை தவறவிட்ட மாணவர்கள்: மாணவர் அமைப்புகள் சார்பாக பொதுநல மனு..

நீட் தேர்வு -

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட், JEE மற்றும் பொத்தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தர விட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  ஊரடங்கால் அண்மையில் நடந்து முடிந்த நீட் மற்றும் JEE தேர்வுகளில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் சற்று தாமதமாக வந்தனர். அதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியானது.

  எனவே, ஊடகங்களில் வெளியான நீட் குறித்த செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவ அமைப்புகள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அக்டோபர் 7-ம் தேதி முதல் LKG சேர்க்கை துவக்கம்  அத்துடன், இது போன்று தேர்வுகளைத் தவறவிடும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் வழங்கும் வகையில் விதிமுறைகள் வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டது.

   
  Published by:Vaijayanthi S
  First published: