அண்ணா பல்கலை. பருவத் தேர்வு : 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு முன், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு :  6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: May 16, 2019, 8:18 AM IST
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்தாண்டு நடத்தப்பட்ட நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வுகளில் 6 கல்லூரிகளின் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கும் முன், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின், முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகித தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

அந்த வகையில் கடந்தாண்டுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் அண்ணாப் பல்கலைக் கழகத்தின் துறைக்கல்லூரிகள், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் 2018-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களின் பருவத் தேர்வின் தேர்ச்சி குறித்த முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியானது.


இதில் நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த பருவத் தேர்வுகளில் 171 கல்லூரிகளின் மாணவர்கள் 10 முதல் 25 விழுக்காடு வரையில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 74 பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

அதில் சில கல்லூரிகளில் ஓரிரு மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவையில் உள்ள 6 பொறியியல் கல்லூரி மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Also see... #SUPEREXCLUSIVE | நன்றாக படிக்காத மாணவர்களை வடிக்கட்டும் பள்ளிகள்: பொதுத்தேர்வு எழுதாத 55,200 மாணவர்கள்!
Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்