தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை வெளியீடு

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
தமிழகத்தில் பொறியியல் படிப்புகான மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாவுக்கான பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி  2020-2021-ம் கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழங்கள் என  500 பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளது.

இவற்றில் இளநிலை படிப்புகளுக்கான B.E,  B.Tech உள்ளிட்டவற்றில் மொத்தம் 2,64,264 இடங்கள் உள்ளன. முதுகலை பொறியியல் படிப்புகளை வழங்கும் 357 கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் மொத்தம் 30,306 இடங்கள் உள்ளன.

500 கல்வி நிறுவனங்கள் இளநிலை பொறியியல் படிப்புகளையும், 357 கல்வி நிலையங்கள் முதுகலை பொறியியல் படிப்பினையும்  வழங்குகின்றன.


வரும் கல்வியாண்டில் ஒரு பொறியியல் கல்லூரி முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை துவங்குவதற்கான அனுமதியினை பெற்றுள்ளது.

Also read... ஒய்வுபெற்ற தலைமைச்செயலாளர்களுக்கு ஒய்வூதியம் அதிகரித்து வழங்க உத்தரவு

3 கல்லூரிகள் புதிதாக இளநிலை பட்டப்படிப்புகளை துவங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் மொத்தம் 2,94,570 இடங்கள் உள்ளன.பொறியியல் கலந்தாய்வினை செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இந்த ஆண்டு உள்ள பொறியியல் இடங்கள் குறித்து தனியாக  உயர்கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading