சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுப்பது போக்குவரத்து நெரிசல் தான். அதிலிருந்து விலக்கு கிடைத்து வானில் பறந்தபடி செல்லுமிடம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே என நாம் பலமுறை கனவாக நினைத்திருப்போம், கூடிய விரைவில் அக் கனவு நனவாகும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டு வரும் சிறிய ரக விமானம் 2023ல் சரக்கு போக்குவரத்திற்கும், 2024ல் மனிதர் செல்லும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளதே இதற்கு காரணம்.
சென்னையைச் சேர்ந்த இ-பிளேன் நிறுவனம், பேட்டரி மூலம் செயல்படும் விமானங்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் இருவர் பயணிக்க முடியும் என்பதுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் செல்ல முடியும். சிறிய ரக எலெக்ட்ரிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி யின் வானூர்த்தி துறை பேராசியர் சக்ரவர்த்தி மற்றும் அவரது மாணவர் பிரஞ்சல் மேத்தா ஆகியோர் இணைந்து e Plane எனும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் National Centre for Combustion Research & Development என்னும் மையத்தில் சிறிய விமானத்தை வடிவ க்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதுடன்
ஜூலை மாதம் சோதனை செய்வதற்கான பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய ரக விமானத்தில் விமானியுடன் ஒரு பயணி மட்டும் செல்ல முடியும்.
Also Read : JEE முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
சிறிய ரக விமானம் குறித்து ஐஐடி சென்ன சார்பில் கூறுகையில், ஒலோ, ஊபர் வாகனத்தினை போன்று பயன்படுத்த ஏர் டாக்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் சிறிய ரக விமானத்தை போன்று 2 சீட்டுகள் கொண்ட . இதன் வடிமைப்புகள் முழுவதும் தயார் செய்யப்பட்டு, e200 என அழைக்கப்படும் ஏர் டாக்சி 200 கிலோ எடையை எடுத்துச் செல்லும் வகையில் தயார் செய்யப்பட்டு, ஜூலை மாதம் சோதனை செய்ய உள்ளோம். அதனைத் தொடர்ந்து மனிதர்களை ஏற்றிச் செல்லும் வகையில் 2024ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2025 ஆண்டு முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாகவும்சென்னை ஐ ஐ டி கூறியுள்ளது.
பேட்டரியால் இயங்கும் சிறிய ரக விமானத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல், வேகமாக குறிப்பிட்டப் பகுதிக்கு சென்று அடையும் வகையில் ஏர் டாக்சியை இயக்கலாம். 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 முதல் 4 முறை இயக்க முடியும்.
சிறிய ரக விமானத்தை இயக்குவதற்கான பாதுகாப்புதுறை, விமானத்துறையிடம் சான்றிதழ்களை பெற்றும் கொள்கை அளவில் அனுமதியும் பெற்ற பிறகு முதலில் சரக்குப் போக்குவரத்திற்கு 2023ல் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதில் மருந்துப்பொருட்களை எடுத்துச் செல்வது, மருத்துவத்துறைப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மத்திய அரசு ட்ரோன்கள் நகரத்திற்குள் பறப்பதற்கு அக்டோபர் மாதம் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இது விமானம் என்றாலும் ட்ரோன் போல இருந்த இடத்தில் இருந்தே மேலே சென்று பறந்து, மேலே இருந்து கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதற்கு ரன்வே தேவையில்லை. அதற்கான வசதியுடன் வீட்டின் கூரையிலும் இறக்க முடியும். தரையில் இருந்து 400 அடிக்கு மேல் செல்வதற்கு அனுமதி (air traffic controller) தேவை. எங்களது விமானம் 1,500 அடிக்கு மேல் செல்லும்.
அதனால் முறையான அனுமதி இல்லாமல் பறக்க முடியாது. இதற்கான பராமரிப்பு செலவும் குறைவாகவே இருக்கும் என்றும் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இவ்விமானத்தின் மாதிரி எலக்ட்ரிக் விமானம் 2 இருக்கை கொண்டதை உருவாக்கி வைத்திருந்தனர். இதனை பிரதமர் மோடி நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai IIT