நாடு முழுவதும் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.79, 600 எனவும், அதிக பட்ச கட்டணம் 1,89,800 ஆகவும் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000 மாக இருந்தது. அதிகபட்சம் ரூ.1,15,000 ஆயிரமாக இருந்தது. தற்போது இவற்றை மாற்றம் செய்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று எம்.இ எம்டெக், எம்.பி.ஏ படிப்புகளுக்கும் கட்டணம் கணிசமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தனியார் இணைப்பு கல்லூரிகள் 494 செயல்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் 550 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் மாணவர் சேர்க்கை போதியளவு இல்லாததன் காரணமாக படிப்படியாக கல்லூரிகள் மூடப்பட்டு தற்போதைய நிலையில் 494 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஏற்படுகின்றன.
ALSO READ | மெட்ரோ ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணி... மாதம் ரூ.65,000 முதல் ரூ.1,65,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே
வரக்கூடிய கல்வியாண்டில் 10 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளன. இத்தகைய சூழ்நிலையில்தான் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கட்டணங்களை உயர்த்த பரிந்துரைத்துள்ளது. ஆனால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டண விகிதங்கள் இரண்டிலிருந்து மூன்று மடங்கு கூடுதலாகும். தற்போதைய நிலையில் முன்னணியில் உள்ள 50 பொறியியல் கல்லூரிகளை தவிர்த்து பிற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறைந்து வருகிறது. மேலும் ஊரக பகுதிகளில் பல கல்லூரிகள் நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முன்னணி பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது.
ALSO READ | மத்திய அரசு வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 72 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே
இதுகுறித்து கூறும் தனியார் கல்லூரி நிர்வாகிகள், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிற விருப்பம் தங்களுக்கு இருந்தாலும் கட்டணத்தை உயர்த்தினால் கட்டண உயர்வை சுட்டிக்காட்டி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர மறுக்கும் நிலை ஏற்படும் என்கிற கருத்தையும் முன் வைக்கின்றனர். இருப்பினும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கலந்து ஆலோசனை செய்து அரசிடம் கட்டண உயர்வுக்கான கோரிக்கையை முன் வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
அரசிடமிருந்து கட்டணத்தை உயர்த்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தால் கட்டண நிர்ணய குழு அது குறித்து முடிவெடுக்கும் என்கின்றனர். பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தையும் நிர்ணயிக்கும் கட்டண நிர்ணயக் குழு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் தமிழகத்தை பொருத்தவரை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரைத்துள்ள கட்டணங்களை முழுமையாக அமல்படுத்தக்கூடிய வாய்ப்பில்லாத இயலாதநிலை உள்ளதே எதார்த்தம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.