ஹோம் /நியூஸ் /கல்வி /

தொழில் கல்வி மாணவர்கள் உயர்கல்வியோடு ஒருங்கிணைக்கும் முயற்சி: ஏஐசிடிஇ முக்கிய அறிவிப்பு

தொழில் கல்வி மாணவர்கள் உயர்கல்வியோடு ஒருங்கிணைக்கும் முயற்சி: ஏஐசிடிஇ முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஒருங்கிணைந்த தரமதிப்பீடு மட்டங்கள் மூலம், தொழில் கல்வித் துறைக்கும், உயர்க்கல்வித் துறைக்கும் இடையிலுள்ள இடைவெளி வெகுவாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாட்டில் செய்தொழில் கல்வியை (Vocational Education) உயர்கல்வியோடு (Mainstream Higher Education)  ஒன்றிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் செய்திறன்கள் தகுதிநிலை சட்டகம் மற்றும் தேசிய உயர்கல்வி தகுதிநிலை சட்டகத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (Unified Credit Framework National Higher Equation Qualification Framework (NHEQF) and National Skill Qualification Framework (NSQF) வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சி, செய்தொழிற் பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வியில்  சேர்வதற்கான நன்கு வரையறுத்தப் பாதையை  உருவாக்கும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்தொழிற் கல்வி பொது கல்வியை விடத் தாழ்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. 9ம் வகுப்பு அல்லது 10,+2ம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களே செய்தொழிற் கல்வியைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது.  மேலும், என்ஜினியரிங் போன்ற பொது உயர்கல்விக்கான சேர்க்கை விதிகள், செய்தொழிற் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. இதன் காரணமாக, செய்தொழிற் கல்விக்கும், என்ஜினியரிங் போன்ற பொது உயர்கல்விக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த தரமதிப்பீடு (Unified Credit Level ), 11 மட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு மட்டத்திலும் கற்றலின் நிலை, குறைந்தபட்ச கல்வித் தகுதி, NHEQF/NSQF மட்டங்கள், பெறப்படும் தரமதிப்பீடுகள்  தரப்பட்டுள்ளன.  கடைசி 4  மட்டங்கள் இளம்நிலை/முதுநிலை பொறியியல் பட்டம், ஆய்வு பதிப்புகளாக உள்ளன.

பட்டத்தின் பெயர்பல்வேறு நிலைகளில் சேர்க்கைக்கான கல்வித் தகுதிபல்வேறு நிலைகளில் வெளியேற்றத்திற்கான கல்வித் தகுதிNHEQF/NSQF மட்டங்கள்ஒருங்கிணைந்த தரமதிப்பீடு  மட்டங்கள்
10ம் வகுப்பு10ம் வகுப்புமட்டம் 23.0
11ம் வகுப்பு/ முதலாம் ஆண்டு டிப்ளோமா10ம் வகுப்பு தேர்ச்சி10ம் வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு டிப்ளமோ (அ) 11ம் வகுப்பு (அ) NHEQF/NSQF 3 மட்டத்தில் உள்ள இணையான கல்வி (அ) ஒருங்கிணைந்த தர்ப்பை தரமதிப்பீட்டில் 3.5  நிலையில் உள்ளவர்மட்டம் 33.5
12ம் வகுப்பு/ இரண்டாம் ஆண்டு டிப்ளோமா10ம் வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு டிப்ளமோ (அ) 11ம் வகுப்பு (அ) NHEQF/NSQF 3 மட்டத்தில் உள்ள இணையான கல்வி (அ) ஒருங்கிணைந்த தர்ப்பை தரமதிப்பீட்டில் 3.5  நிலையில் உள்ளவர்10ம் வகுப்பு மற்றும் இரண்டு   ஆண்டுகள்  டிப்ளமோ (அ) 12ம் வகுப்பு (அ) NHEQF/NSQF 4 மட்டத்தில் உள்ள இணையான கல்வி (அ) ஒருங்கிணைந்த தர்ப்பை தரமதிப்பீட்டில் 4வது   நிலையில் உள்ளவர்மட்டம் 44.0
இறுதி ஆண்டு டிப்ளோமா10ம் வகுப்பு மற்றும் இரண்டு   ஆண்டுகள்  டிப்ளமோ (அ) 12ம் வகுப்பு (அ) NHEQF/NSQF 4 மட்டத்தில் உள்ள இணையான கல்வி (அ) ஒருங்கிணைந்த தர்ப்பை தரமதிப்பீட்டில் 4வது   நிலையில் உள்ளவர்டிப்ளோமாமட்டம் 54.5
முதலாம் ஆண்டு இளநிலை பட்டம்12ம் வகுப்புத் தேர்ச்சிஇளநிலை பட்டம்மட்டம் 54.5

இரண்டாம் ஆண்டு இளம்நிலை பட்டம்NHEQF 5 மட்டத்துடன்  தொடர்புடைய பொறியியல் மற்றும் செய்தொழில் கல்வியில் டிப்ளோமா பட்டம்     பெற்றவரும்/  ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டில் 4.5  வது நிலையில் உள்ளவரும்இளநிலை டிப்ளமோமட்டம் 65.0
மூன்றாம் ஆண்டு இளநிலை பட்டம்NSQF 6 மட்டத்துடன்  10+4/10+2 கல்வி  முறையில் தேர்ச்சி பெற்றவரும்/  ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டில் 5  வது நிலையில் உள்ளவரும்செய்தொழில்  படிப்பில் இளநிலை பட்டம்மட்டம் 75.5
 இறுதி ஆண்டு இளநிலை பட்டம்பிஎஸ்சி/ செய்தொழில் கல்வியில் 3 ஆண்டுகள் முடித்தவரும்,  ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டில் 5.5 வது நிலையில் உள்ளவரும்பி.இ.,/பி.டெக்இளநிலை பொறியியல் பட்டம்6.0
முதலாம் ஆண்டு முதுநிலை பட்டம்தொழில்நுட்ப பிரிவில் நான்கு ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவரும், ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டில் 6வது நிலையில் உள்ளவரும்முதுநிலை படிப்புச் சான்றிதழ்முதுநிலை பொறியியல் பட்டம்6.5
முதுநிலை படிப்பின் இறுதி ஆண்டுதொழில்நுட்ப முதுநிலை படிப்பில் ஓராண்டு சான்றிதழ் பெற்றவரும், ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டில் 6.5 நிலையில் உள்ளவரும்எம்.இ., எம்.டெக்பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம்7.0
ஆய்வு படிப்புதொழில்நுட்ப முதுநிலை படிப்பில் 7வது மட்டத்தை கடந்தவரும்/பொது பி.ஜி படிப்பில் 6.5 நிலையில் உள்ளவரும்ஆய்வு பட்டம்ஆய்வு பட்டம்7.5

இந்த ஒருங்கிணைந்த தரமதிப்பீடு மட்டங்கள் மூலம், தொழில் கல்வித் துறைக்கும், உயர்க்கல்வித் துறைக்கும் இடையிலுள்ள இடைவெளி வெகுவாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Engineering student