தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி- 14 கல்லூரிகளுக்கு அனுமதி

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வியை பயிற்றுவிக்க 14 கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

  • Share this:
    பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், பிராந்திய மொழிகளிலும் பொறியியல் கல்வியை பயிற்றுவிக்க ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மே மாதம் 27ம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதன்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, வங்காளம் என 7 பிராந்திய மொழிகளில் கல்வி பயிலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பங்கள் அளித்த நிலையில், முதற்கட்டமாக 14 கல்லூரிகளுக்கு மட்டும் ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

    இதில் இந்தி மொழிக்கென உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு கல்லூரிகளுக்கும், ராஜஸ்தானில் இரண்டு கல்லூரிகளுக்கும், மத்திய பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் தலா ஒரு கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மராத்தி மொழிக்கு மகாராஷ்டிராவில் இரண்டு கல்லூரிகளுக்கும், தெலுங்கு, வங்காள மொழிகளுக்கு தலா ஒரு கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டை பொருத்தவரை ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மின் மற்றும் மின்னணு பொறியியல் (TRIPLE E) என 3 பிரிவுகளுக்கும், கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கும் தமிழ் வழியில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பிராந்திய மொழியில் மாணவர்கள் கல்வி பயில நாடு முழுவதும் மொத்தம் 1,050 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் மேலும் 11 பிராந்திய மொழிகளில் பாடம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் சாஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

    பிராந்திய மொழியில் கல்வி பயில்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கல்வியாளர்கள், இதில் ஆக்கப்பூர்வமான வேலைகள் இருப்பதாகவும், மாணவர்களுக்கு எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மொழிப்பெயர்த்தல் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே பொறியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நுழைவுத்தேர்வு இல்லாததால் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாவதாக குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளில் முறையான கல்வி கற்பிக்கப்படுவதில்லை எனவும், அதனால் படைப்பாக்க சிந்தனை இல்லாத பொறியாளர்கள் உருவாவதாகவும் விமர்சித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published: