ஹோம் /நியூஸ் /கல்வி /

ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் - இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் - இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் என்று அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

  அதன்படி காலை மாலை என இருவேளைகளில் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

  கொரோனோ பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகின்றது.

  செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றை பதிவிறக்கம் செய்து தாள்களில் விடைகளை எழுதி மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுகளை எழுத உள்ளனர்.

  அந்த வகையில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆன்லைன் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Online class