Home /News /education /

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவுரை

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவுரை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

School students : நோய் கட்டுப்படுத்த பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளி பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வரக்கூடாது.

    மாணவர்கள் கொரானா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இன்று(1.2.22) தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. ஆகையால் தடுப்பு நடவடிக்கைகளை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவை வருமாறு:

    பள்ளி கல்லூரி பாலிடெக்னிக் வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.

    வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் இடம் விட்டு போட வேண்டும்.

    மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக பள்ளி நுழைவு வாயில் கிருமிநாசினி வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு வளாகத்தின் நுழைவு வாயிலே உடல் பரிசோதனை செய்யவேண்டும்.

    மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும், மாணவர்கள் மதிய வேளை உணவு அருந்தும்போது தனித்தனியே சமூக இடைவெளியுடன் உணவு உண்ண வேண்டும்.

    அறிகுறி உள்ள மாணவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை செய்யவேண்டும்.

    நோய் கட்டுப்படுத்த பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளி பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வரக்கூடாது.

    Must Read : மருத்துவ படிப்பில் சேரும் விவசாயி மகள்... கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

    15 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: College, Corona, School open

    அடுத்த செய்தி