அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி - பள்ளிக் கல்வித்துறை

news18
Updated: September 18, 2019, 7:55 AM IST
அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை
news18
Updated: September 18, 2019, 7:55 AM IST
அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

அரசுப் பள்ளிகளில் விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி முதல்வர்களே முடிவு செய்யலாம் என்றும் அனுமதி அளிக்கும் தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் பாட வேளை, தேர்வு காலம் பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வெஏண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டட்டுள்ளது.

Also watch

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...