ஹோம் /நியூஸ் /கல்வி /

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். (B.NY.S) மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

  முக்கியமான நாட்கள்: 

  விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்யும் காலம்: 28.09.2022 முதல் 19.10.2022

  மாலை 5 மணி வரை

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால்/ கூரியர் சேவை வாயிலாக சமர்பிக்கவோ அல்லது நேரில் சமர்பிக்கவோ கடைசி நாள்: 19.10.2022 மாலை 05.30 மணி வரை

  விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வழங்கப்படமாட்டாது.

  இதையும் வாசிக்க: தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் சுமார் 5 லட்சம் காலியிடங்கள் : விண்ணப்பிப்பது எப்படி?

  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 19.10.2022 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Medical College, Medical Courses, Medical education