2022 – 2023 ஆம் ஆண்டிற்கான அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
2022 – 2023 ஆம் ஆண்டிற்கான அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை
Music School Admission : இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் மிகச் சிறப்பாக 3 வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 3 வருட முழு நேர அரசு சான்றிதழ் பயிற்சி 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவியருக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளி, 5/19 புழுகாப்பேட்டை தெரு, சீர்காழியில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் மிகச் சிறப்பாக 3 வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு விதிகளின் படி இலவச விடுதி வசதி, அரசு கல்வி உதவித் தொகை இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணம் ரு.350 செலுத்த வேண்டும். மாணவ, மாணவியர் சேர்க்கை 01.06.2022 முதல் தொடங்கப்பட இருக்கிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் மேலும் விவரங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சீர்காழி அவர்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.