2022-23ம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக 6 ஆண்டுகள் (அனுமதிக்கப்பட்ட முனைவர் படிப்புக் கால அளவு), ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும். முதுகலைப் படிப்பில் 50% விழுக்காடு பெற்ற மதிப்பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேர முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பகுதிநேர ஆராய்ச்சி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாண்டில் இத்திட்டத்திற்கான மொத்த செலவீனம் 16 கோடியாகும். எனவே, முனைவர் பட்டம் மேற்கொள்ளும் 1600 மாணவர்கள் மதிப்பெண் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
முதல் வருடம் சேர்க்கையின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம். நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டுகளுக்கு மாணவர் பயிலக் கூடிய படிப்பு பிரிவின் துறை தலைமை அலுவலர் (Head of the Department) மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டி அலுவலரால் (Guide) முந்தைய ஆண்டுகளில் மாணவரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் திருப்திகரமான முன்னேற்றம் குறித்து அளிக்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படும்
விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.02.2023 அன்று மாலை 5.45 மணி வரை ஆகும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை - 600005 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scholarship