• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் : உயர்கல்வித்துறை அனுமதி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் : உயர்கல்வித்துறை அனுமதி

மாதிரி படம்

மாதிரி படம்

கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி.

  • Share this:
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக தலா 25 சதவீதம் இடங்களுக்கு உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    அந்த அரசாணையில், அரசு கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளின் நலன் கருதி 2021-22 ஆம் கல்வியாண்டில் தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளில் 25 சதவீத இடங்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீத இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டுமென்று கல்லூரி கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.

    கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துருவை பரிசீலித்த அரசு 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ள நிலையில், இக்கல்வி ஆண்டுக்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    மேலும், இந்த கூடுதல் சேர்க்கை இடங்களுக்கு கல்லூரிகள் சார்ந்திருக்கும் பல்கலைக்கழகங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

    Must Read : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை - மா.சுப்பிரமணியன்

    கடந்த கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் கூடுதலாக தலா 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: