ஹோம் /நியூஸ் /கல்வி /

‘காலேஜில் சேர முடியாத உங்க நண்பர்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க…’ – தமிழக அரசின் சூப்பர் திட்டத்தில் இணைந்த கலையரசன்

‘காலேஜில் சேர முடியாத உங்க நண்பர்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க…’ – தமிழக அரசின் சூப்பர் திட்டத்தில் இணைந்த கலையரசன்

நடிகர் கலையரசன்

நடிகர் கலையரசன்

மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை தொடர தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் பிரபல நடிகர் கலையரசன் இணைந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கல்லூரி செல்ல முடியா மாணவர்களை கண்டறியும் தமிழக அரசின் முயற்சியில் பிரபல நடிகர் கலையரசன் இணைந்துள்ளார்.

  தமிழகத்தில் 12-ஆம் வகுப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

  இதன்படி, கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பெற்றோர் மாணவர் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் 79,762 பேர் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மாணவட்ட ஆட்சியர் தலைமையில் பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்திட ஏதுவாக முகாம் நடைபெற்றது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்றனர்.

  ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம்... முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

  கடந்த ஆகஸ்ட் 26-ல் பங்கேற்காத 2021-22 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பை முடித்து உயர்கல்வி தொடர முடியாத மாணவர்கள் பலன் அடையும் வகையில் வரும் 28-ம்தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் பெற்றோர் கூட்டம், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

  இதுதொடர்பாக சுற்றறிக்கை அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களின் வழியே ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

  கேலியை புறக்கணித்து சாதித்தேன்.. மருத்துவப் படிப்பை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவி நெகிழ்ச்சி

  இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை தொடர தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் பிரபல நடிகர் கலையரசன் இணைந்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் 12ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோவில்,’உங்களுடன் 12ஆம் வகுப்பு படித்த நண்பர்கள் இப்போது என்ன செஞ்சிட்டு இருக்காங்க என்பதை கண்டுபிடிங்க.  உங்களால யாரை கண்டுபிடிக்க முடியலையோ அவங்கள நேரில் சென்று விசாரித்து, சொந்தக்காரங்களை கேட்டு கண்டுபிடித்து விடலாம்.

  அவர்களில் யாரெல்லாம் காலேஜ் போகவில்லையோ அவங்க லிஸ்ட நேரா உங்க பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுங்க. அவர் மூலமாக உங்க நண்பர்கள் கல்லூரி செல்வதற்கான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Education