Home /News /education /

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் மாணவர்களை வெளியே அனுப்புவதும்  பெற்றோர்களை தரக்குறைவாக பேசுவதும் அடிப்படைக் கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும்.

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறீக்கையில், மாணக்கர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் இதுபோல் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவர்களை வெளியே அனுப்புவதும்  பெற்றோர்களை தரக்குறைவாக பேசுவதும் அடிப்படைக் கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மேற்கண்டவாறு கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணாக்கர்கள் வகுப்பறைக்கு வெளியே அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணாக்கர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மேற்படி நிகழ்வுபோல் இனிவரும் காலங்களில் எந்தவொரு மெட்ரிகுலேசன் பள்ளியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பள்ளி நிர்வாகத்திற்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அதனை அவ்வப்போது பள்ளிகளில் செயல்படுத்துவதை பள்ளி ஆய்வின்போதும் பள்ளிப் பார்வையின் போதும் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு கல்விக்கான மத்திய அரசின் நிதி குறைப்பு!


மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாக புகார் எதுவும் பெறப்பட்டால் அதன்மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது சார்ந்து அவ்வப்போது  மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்திற்கு தவறாமல் அறிக்கை அனுப்பிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Published by:Murugesh M
First published:

Tags: Fees, School, School students

அடுத்த செய்தி