கல்வி உரிமைச் சட்டப்படி 25% இடஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தேதி ஒத்திவைப்பு!

கல்வி உரிமைச் சட்டப்படி 25% இடஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தேதி ஒத்திவைப்பு!
கோப்புப் படம்
  • Share this:
தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி 25% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை குழந்தைகள் LKG வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர் அந்த வகையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியிருக்க வேண்டும், தற்போது கொரோனோ நோய் பரவலை தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனையடுத்து தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான தேதி ஏப்ரல் 15-ம் தேதிக்கு பின் துவங்கும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் வசிப்பிடத்தில் இருந்து 1 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading