1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு

1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு
பள்ளி கல்வித்துறை
  • News18
  • Last Updated: September 15, 2020, 1:54 PM IST
  • Share this:
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனோ பரவலால் இந்த ஆண்டு வழக்கமாக பள்ளிகள் திறக்கப்படும் ஜுன் மாதம் திறக்கப்படவில்லை இதனால் 2020-2021ம் கல்வியாண்டு முடங்கியுள்ளதுடன் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முழுமையாக பாடப்பகுதிகளை முடிக்க முடியாதநிலை உள்ளது. இதற்கிடையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.


அன்மையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் வரும் 21ம் தேதி முதல் 9 முதக் 12ம் வகுப்பு வரையில் பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் ஒப்புதலுடன் பள்ளிக்குச் வருகைபுரிந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... நீட் தேர்வுக்காக பீகாரிலிருந்து கொல்கத்தாவுக்கு 700 கி.மீ பயணித்த மாணவன்- 10 நிமிடம் தாமதமானதால் தேர்வு எழுத முடியாமல் போன சோகம்கொரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் பணிகளில் ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய பள்ளிக்கல்வித்துறைப் ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் பாடப்பகுதிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது.இதனையடுத்துன் தற்போது 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாடத்திட்ட குறைப்பு பணிகளை மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிறைவு செய்துள்ளது.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading