பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில்,
(i) 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் (ii) 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகள் (அனைத்து பிரிவினருக்கும்) என இரண்டு கூறுகளை பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டுள்ளது.
இரண்டு திட்டங்களும் ஒரே திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தெரிவித்தல் வேண்டும்
இரண்டு திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தில் மட்டுமே மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
பிரிமெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விடுதியில் தங்கி பயிலும் 3 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், விடுதியில் அல்லாமல் பெற்றோர்/பாதுகாவலருடன் பயிலும் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் அனைத்து இன மாணவர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாணாக்கர்களுக்கு ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கே கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்பதால் மாணாக்கர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக National Scholarship Portni (NSP) ல் மாணாக்கர்களின் விவரங்கள் பதிவு செய்த பின்ரே கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் ( NSP யில்பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்)
இதையும் வாசிக்க: கணினி அறிவியலில் மக்களிடம் நற்பெயர் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் -அண்ணா பல்கலை வெளியீடு..
இத்திட்டங்கள் 60:40 என்ற விகிதத்தில் செயல்படுத்தப்படும்.
2022-23ஆம் கல்வியாண்டு முதல் மாணாக்கர்கள் இணைய வழியில் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க வேண்டும். மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க உதவும் வகையில் Nodal Officer நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Education, Scholarship