கொரோனா34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சைதாப்பேட்டையில் இயங்கி வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக போட்டித் தேர்வு பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக இயங்கிவந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET, JEE உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய வகையில் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. அவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி நடக்கும் பள்ளிகளிலேயே தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மூன்று மையங்கள் இயங்கி வருகின்றன . அதில், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 78 மாணவர்களில் 34 மாணவர்களுக்கு அன்மையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சைதாப்பேட்டை போட்டித்தேர்வு பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மீதமிருக்கும் மாணவர்கள் விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் வகுப்புகள் நடைபெறவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.