Home /News /education /

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும் வரை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படாத நிலையில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2'வில் கொரோனா ஊரடங்கால் நடத்தப்படாத ஒரு தேர்வு ஆகியன ஜூன் 1 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வரும் நிலையில், இவர்களுக்கு போக்குவரத்து வசதி குறித்து அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஎஸ்சி தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை தமிழக அரசு அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும் வரை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி