அரசு பள்ளி மாணவர்களுக்கு கானல் நீராக மாறிய மருத்துவ படிப்பு! பரிதவித்த ஏழை மாணவியின் கதை...

மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருந்த நளினியின் பெற்றோர், கட்டிட வேலை செய்து அவரை படிக்கவைத்துள்ளனர். மருத்துவ இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு கலந்தாய்விற்கு வந்தவர்களுக்கு கண்ணீரே மிஞ்சியது.

Web Desk | news18
Updated: July 14, 2019, 11:05 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு கானல் நீராக மாறிய மருத்துவ படிப்பு! பரிதவித்த ஏழை மாணவியின் கதை...
மருத்துவ படிப்பில் சேர போராடும் மாணவி
Web Desk | news18
Updated: July 14, 2019, 11:05 AM IST
அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்காத நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கும் மருத்துவ கனவு கலைந்து போயுள்ளது.

தமிழக அரசு சார்பில் 412 பயிற்சி மையங்களில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3,500 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும் அதற்கு பலனில்லை.

அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. திண்டிவனம் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்டூ படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவி நளினி, அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்று 296 மதிப்பெண் பெற்றார்.

கலந்தாய்வில் பங்கேற்ற பட்டியலினத்தைச் சேர்ந்த அவருக்கு, இடம் கிடைக்காததால், மருத்துவ கனவு கலைந்து பரிதவித்து நிற்கிறார். நீட் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருந்த நளினியின் பெற்றோர், கட்டிட வேலை செய்து அவரை படிக்கவைத்துள்ளனர். மருத்துவ இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு கலந்தாய்விற்கு வந்தவர்களுக்கு கண்ணீரே மிஞ்சியது.

எப்பாடுபட்டாவது மகளை தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்தாவது மருத்துவராக்க வேண்டும் என்ற பெருங்கனவோடு உள்ளனர் நளினியின் பெற்றோரும், உறவினர்களும்.

பிளஸ்டூவில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் என்னும் முள்வேலியை தாண்ட முடியாமல் ஏழை மாணவர்கள் தவித்து நிற்கும் காட்சிகள் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன.
Loading...
Also watch: பேருந்தில் லேப்டாப் எடுத்துட்டு போறிங்களா! உஷார்... 

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...