• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு தேர்வு...! யு.ஜி.சி அமைத்த குழு பரிந்துரை

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு தேர்வு...! யு.ஜி.சி அமைத்த குழு பரிந்துரை

யூஜிசி

யூஜிசி

12 பேர் கொண்ட குழுவை ஹரியானா மத்தியப் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் K.C. குஹத் தலைமையில் யுஜிசி அமைத்தது. அக்குழு தற்போது யுஜிசி-க்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

  • Share this:
12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தி முடிக்காத மாநிலங்களில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு எதிர்வரும் கல்வியாண்டில் தேசிய மற்றும் மாநில அளவில் பொதுவான ஒரு தேர்வை நடத்த யு.ஜி.சி அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும்  ஊரடங்கு அமலில் உள்ளதைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டிலும் அடுத்த கல்வியாண்டிலும் கல்லூரிகளைத் திறப்பது, தேர்வுகளை நடத்துவது, மாணவர் சேர்க்கை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக 12 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஹரியானா மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் K.C. குஹத் தலைமையில் அமைத்தது. அந்தக் குழு தங்களின் பரிந்துரைகளை யுஜிசி-யிடம் வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை. எனவே எதிர்வரும் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை, ஆராய்சிப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய, மாநில அளவில் பொதுவான ஒரு தேர்வை நடத்துமாறு அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஊரடங்கு முடிந்த பின் நடைபெறும் தேர்வுகளுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைக்கவும், எதிர்வரும் கல்வியாண்டு மற்றும் அடுத்த கல்வியாண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் செயல்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆண்டு தவிர்த்து முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வெழுதுதல், ஒரு மதிப்பெண் முறையில் தேர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மொத்த 100 மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டரின் உள் மதிப்பெண் (internal marks) அடிப்படையிலும், மீதம் 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டர் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் வழங்கலாம் என அந்தக் குழு தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வை ஜூன் மாத கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளைத் தொடங்கவும், முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1ந் தேதி தொடங்கவும் பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: