குரூப்-4 தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்
குரூப்-4 தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்
குரூப்-4
TNPSC Group 4 : மயிலாடுதுறை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் குரூப்-4 தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றார். | A blind student who enthusiastically participated in the Group-IV examination
மயிலாடுதுறை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் குரூப்-4 தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றார்.
தமிழ் நாடு அரசுத் துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு இன்று நடைபெற்றது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்விற்கு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் 80 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.
இதில் 23,951 தேர்வர்கள் தேர்வு எழுதினர். தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்காக ஒவ்வொரு தாலுகாவிற்கும் தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 80 தலைமை கண்காணிப்பாளர்கள், 7 பறக்கும்படை அலுவலர்கள், 16 சுற்றுக்குழு அலுவலர்கள், 80 ஆய்வு அலுவலர்கள், 84 வீடியோ கிராபர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டனர். தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு எழுத வசதி ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் அமைக்கப்பட்டது. தேர்வு எழுதுபவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதியும், அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆர்வமுடன் பங்கேற்ற பார்வையற்ற மாணவர்
ஆர்வமுடன் பங்கேற்ற பார்வையற்ற மாணவர்குறித்த நேரத்தில் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் சீட்டுகள் அந்தந்த மையங்களில் வழங்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் எவ்வித சிரமமின்றி ஆர்வமுடன் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் வரலாறு படித்த முதுநிலை பட்டதாரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி முத்து மாணிக்கம் என்ற தேர்வர் குரூப் 4 தேர்வில் உதவி எழுத்தர் மூலம் ஆர்வமுடன் தேர்வு எழுதியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.