87% இடங்கள் காலி... ஒருவர் கூட சேராத 109 கல்லூரிகள்...! பொறியியல் கலந்தாய்வின் அவலநிலை

தனியார் கல்லூரிகளில் உள்ள 1,51,574 இடங்களிலும், வெறும் 13,379 இடங்கள் மட்டுமே தற்போது வரை நிரம்பி இருக்கிறது.

87% இடங்கள் காலி...  ஒருவர் கூட சேராத 109 கல்லூரிகள்...! பொறியியல் கலந்தாய்வின் அவலநிலை
பொறியியல் கலந்தாய்வு
  • News18
  • Last Updated: July 22, 2019, 3:03 PM IST
  • Share this:
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 87 % இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில், மொத்தம் 1,66,582 இடங்களில், வெறும்   21,532 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலகட்டத்தில் 40,000 இடங்கள் நிரப்பப்படும் நிலையில், இந்தாண்டு வெறும் 21,000 இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன.


மொத்தமுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்,  27-கல்லூரிகளில் மட்டுமே, 50% மேல் இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

தனியார் கல்லூரிகளில் உள்ள 1,51,574 இடங்களிலும், வெறும் 13,379 இடங்கள் மட்டுமே தற்போது வரை நிரம்பி இருப்பதாகவும்,

அண்ணா பல்கலைக்கழகத்தின் 8, 840 சீட்டுகளில் 3,578 சீட்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், 109 கல்லூரிகளில் ஒரு இடம் கூட இதுவரை நிரப்பப்படவில்லை.

370 கல்லூரிகளில் வெறும் ஒரு இடம் மட்டுமே நிரம்பி இருக்கின்றன.

பொறியியல் படிப்புகளுக்கு வேலை கிடைப்பதில்லை என்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள எண்ணமே, இடங்கள் குறைவதற்கான காரணம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், 3-ம் கட்ட கலந்தாய்விற்கு 33,167 மாணவர்களும், 4-ம் கட்ட கலந்தாய்விற்கு 37,599 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிவில், 72,648 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இந்தாண்டு 60,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது

Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading