இந்தியாவில் தற்போது மொத்தமுள்ள 11,68,292 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8,33,703 பள்ளிகள் (71%) மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு 'அணுகக் கூடிய இந்தியா' என்ற திட்டத்தை மத்திய அரசுத் தொடங்கியது. சுற்றுச்சூழல் (Built in Environment), போக்குவரத்து முறை, தகவல் மற்றும் தொடர்பு கட்டமைப்புகள் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தும் விதமாக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் படி, 2022 ஜூன் மாதத்துக்குள் 50 நகரங்களில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 25 முதல் 30% அரசு கட்டிடங்களைத் தணிக்கைச் செய்து அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்ற வேண்டும்; தேசிய/மாநில தலைநகரங்களில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த 50% அரசு கட்டிடங்களை அனைவரும் பயன்படுத்தக் கூடிய வாகையில் மாற்ற வேண்டும் முதல் இரண்டில் வராத நாட்டின் முக்கிய 10 நகரங்களில் உள்ள 50% அரசு கட்டிடங்களை தணிக்கைச் செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுளளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 71% அரசுப் பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக மாற்றப்பட்டுளளதாக சமூக நீதி துறை அமைச்சகம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள 35 சர்வதேச விமான நிலையங்கள், 55 உள்நாட்டு விமான நிலையங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது .
அணுகத்தக்க இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை, இலக்கு காலத்தை நீட்டிப்பது தொடர்பாக வரும் 24ம் தேதி மத்திய ஆலோசனை குழு (Central Advisory board) ஆலோசனை நடத்தவுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.
முன்னதாக, தமிழகத்தில் மொத்தமுள்ள அரசுப் பள்ளிகளில், 32% பள்ளிகளில் மட்டுமே சிறப்பு பிரிவு மாணவர்ளுக்கான பிரத்யேக கழிவறைகள் இருப்பதாக கல்வி பிளஸ் (யுடிஐஎஸ்இ +) 2019 -20க்கான ஐக்கிய மாவட்ட தகவல் அமைப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 24% ஆகும். அதே சமயம், 98% அரசுப் பள்ளிகள் மாற்றுத் திறனாளிகள் அணுகத்தக்க வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.