Home /News /education /

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு.. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு புதிய சிக்கல்

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு.. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு புதிய சிக்கல்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் (கோப்பு)

மருத்துவ கல்லூரி மாணவர்கள் (கோப்பு)

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக நீட் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற 303 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர வாய்ப்பிருக்கும் நிலையில், தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாததால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    கலந்தாய்வின்போது தனியார் மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த குறிப்பிட்ட நாட்களுக்குள் கல்விக் கட்டணத்தை செலுத்த தவறினால் அரசுப் பள்ளி மாணவர்களின் இடத்தை மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் நிரப்பிவிடும் சூழல் உள்ளது.



    7.5 விழுக்காடு சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு என குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்றும் கல்வியாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

    நீட் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டிலாவது கல்விக் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
    Published by:Rizwan
    First published:

    Tags: Medical colleges, Neet, Reservation

    அடுத்த செய்தி