Home » News » Education » 7 5 PERCENTAGE RESERVATION FUNDING FOR MEDICAL STUDENTS ON PRIORITY BASIS GOVERNMENT WILL PAY TUITION AND ACCOMMODATION FEES VAI

7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..

7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக 16 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..
கோப்பு படம்
  • Share this:
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து பல்வேறு தரப்பினர் நெருக்கடியால் கடந்த 30-ஆம் தேதி 7.5% உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 7.5 சதவீத முன்னுரிமை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக 16 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுழல் நிதியை உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க...Cyclone | வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது.. தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு..


இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் 209 பேர் மற்றும் சுயநிதிக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 104 மணவர்கள் பயன்பெறுவர். இதேபோல அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 6 பேர் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 80 பேருக்கான கட்டணங்களும் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading