ஹோம் /நியூஸ் /கல்வி /

7.5% இட ஒதுக்கீடு; மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75% முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி

7.5% இட ஒதுக்கீடு; மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75% முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி

7.5% இட ஒதுக்கீடு

7.5% இட ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை மேலும் அதிகரிப்பதற்கு சிறப்பு வகுப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

7.5 விழுக்காட்டின் கீழ், மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினர்,  முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் சதவீதம் கணிசமாக குறைந்தது. இதனை அடுத்து மருத்துவ படிப்பில் 7.5% சதவிகிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு 350 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தனர்.

அந்த வகையில்  2020ம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்  கீழ் , அரசு பள்ளி மாணவர்கள் 350 பேர் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தனர். அவர்கள் முதலாம் ஆண்டு தேர்வு எழுதி முடித்திருக்கின்றனர். இதில் 75 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் அல்லாத மாணவர்களில் 85 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்குனராக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை மேலும் அதிகரிப்பதற்கு சிறப்பு வகுப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

7.5%  சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு இடங்கள்  ஒதுக்கீடு என்ற அரசின் முடிவு வெளியான பின்னர் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான சுமையை தாங்குவார்களா என்கிற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேராததை சுட்டிக்காட்டி இட ஒதுக்கீடு காரணமாக மட்டுமே மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வது சாத்தியமாகி இருப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன .

மேலும் இவ்வாறு சேரும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறுவார்களா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தற்போது முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களில் 75% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு வழங்கியுள்ள 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டு வாய்ப்பின்  முக்கியத்துவத்தை உணர்ந்து மருத்துவம் பயில தொடங்கி இருக்கின்றனர் என்பது இந்த முடிவுகள் மூலம் தெளிவாகி இருக்கின்றது.

வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது மூலமே எதிர்கால சமுதாயத்தின் திறன்களை தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலைக்கேற்ப  மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாய்ப்பை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் என்பது இதன் மூலமாக உறுதியாகின்றது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Government, MBBS, Student