தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்காக 350 இடங்களும், மருத்துவ மேற்படிப்பில் 508 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் சுகாதார நாளை முன்னிட்டு நேற்று சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் நிகழ்ச்சியில் 5 ரூபாய் செலுத்தினால் நாப்கின் வரும் இயந்திரத்தை அறிமுப்படுத்தினார்.
மேலும் மாதவிடாய் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் நாடக நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 7 கோடி செலவில் நாப்கின் எந்திரம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்காக 350 இடங்களும், மருத்துவ மேற்படிப்பில் 508 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் மருத்துவத்துறையில் இவ்வளவு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Also see... வெய்ட் & சீ - சபாநாயகர் குறித்த கேள்விக்கு மு.க.ஸ்டாலின் சஸ்பென்ஸ் பதில்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Medical education, Medical seat, Minister Vijayabaskar, Tamil Nadu