ஹோம் /நியூஸ் /கல்வி /

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5 நாட்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு! நீங்களும் பதிவு செய்ய விருப்பமா?

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5 நாட்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு! நீங்களும் பதிவு செய்ய விருப்பமா?

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5 நாட்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு!

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5 நாட்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு!

1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தப்பட உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 5 தினங்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

12ம் வகுப்பு வரை படித்தவர்கள் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்பித்தல் மற்றும் கற்றல் பாதிப்புகளை தன்னார்வலர்கள் கொண்டு மேம்படுத்தும் திட்டமே ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ ஆகும்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். இது முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்கள், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக இந்த திட்டம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தமாக 17 லட்சம் தன்னார்வலர்கள் வரை இந்த திட்டத்திற்கு தேவைப்படும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும்.

மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் முழு விபரம் சேகரிக்கப்படும். 1 முதல் 5 வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்க 12ம் வகுப்பு வரை தன்னார்வலர்கள் படித்திருந்தால் போதும். தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்க தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்.

கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற செயல்பாடுகளும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனாவிற்கு பின்னர் கல்வி இடைநிற்றலில் ஒரு லட்சம் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் 1 முதல் 5 ம் வகுப்பு வரையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை என இரண்டு குழுக்களாக வகுப்புகள் நடைபெறும். ஆர்வம் இருக்கும் தன்னார்வலர் இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Minister Anbil Mahesh, News On Instagram, Tn schools