Home /News /education /

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களில் 50 சதவீத பேர் ஆங்கில வழியில் படிப்பவர்கள்!

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களில் 50 சதவீத பேர் ஆங்கில வழியில் படிப்பவர்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து வருகின்றனர் என கூறப்படும் நிலையில், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களிலும், ஆங்கில வழி மாணவர்களே அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நடப்பாண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள 26 லட்சத்து, 76 ஆயிரத்து, 718 மாணவர்களில், 13.3 லட்சம் மாணவர்கள் தமிழ் வழியில் எழுதுகின்றனர். 50 விழுக்காடு மாணவர்கள், ஆங்கில வழியில் தேர்வை எழுதுபவர்கள் என தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி பிரத்தியேகமாக தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில், 54 அரசு பள்ளிகளில் முழுக்க, முழுக்க ஆங்கில வழியிலான கல்வி மட்டுமே வழங்கப்பட்டு வருவது குறித்த செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், பொதுத்தேர்வை எழுத உள்ள 10, 11, 12 ஆகிய மாணவர்களில்  49.68 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பொதுத் தேர்வை எழுதுபவர்கள் என்பதும், மற்ற அனைவரும் ஆங்கில வழியில் தேர்வை எழுதுபவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

4 ஆண்டு இளநிலை படிப்பு.. முதுகலை பயிலாமல் பிஎச்டி படிப்புகளில் சேரும் வகையில் புதிய திட்டம்: யுஜிசி முடிவு

10ம் வகுப்பு தேர்வை, 9 லட்சத்து, 55 ஆயிரத்து 476 மாணவர்களும்,
11 ம் வகுப்பு தேர்வை, 8 லட்சத்து, 83 ஆயிரத்து 925 மாணவர்களும்,
12 ம் வகுப்புதேர்வை, 8 லட்சத்து, 37 ஆயிரத்து 317 மாணவர்களும், என மொத்தம் 26 லட்சத்து, 76 ஆயிரத்து 718 பேர் எழுத இருக்கின்றனர்.

இவர்களில், 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே தமிழ் வழியில் தேர்வை எழுத உள்ளனர் என்பது, புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து வருகின்றனர் என கூறப்படும் நிலையில், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களிலும், ஆங்கில வழி மாணவர்களே அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
-
Published by:Esakki Raja
First published:

Tags: 10th Exam, 12th exam

அடுத்த செய்தி