சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் படித்த மாணவிகள் 5 பேருக்கு மருத்துவ சீட்..

கோப்பு படம்

சென்னையில் ஒரே அரசு மகளிர் பள்ளியில் பயின்ற 5 மாணவிகள், 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து அசத்தியுள்ளனர்.

 • Share this:
  மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில், அரசு பள்ளியில் பயின்ற 7.5 விழுக்காட்டினருக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

  அதன்படி, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 5 மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவி பத்ம பிரியா, சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீட்டை பெற்றுள்ளார். அப்ரின் சிபாயா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், கோவர்த்தினி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும் பயில்வதற்கான ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர்.

  மேலும் படிக்க..மருத்துவப் படிப்புக்கான தமிழ்நாடு ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் இடம்பிடித்தது எப்படி? மு.க.ஸ்டாலின் கேள்வி  மாணவி பிரேமா வேலூர் மருத்துவக் கல்லூரியிலும், மற்றொரு மாணவி பவதாரணி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியிலும் சேர உள்ளனர். மேலும், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மொத்தம் 11 மாணவிகள் 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: