Home /News /education /

மாஸ்டர் டிகிரி முடிக்காமல் நேரடியாக பிஎச்டி படிக்க வாய்ப்பு - மத்திய அரசு புது திட்டம்

மாஸ்டர் டிகிரி முடிக்காமல் நேரடியாக பிஎச்டி படிக்க வாய்ப்பு - மத்திய அரசு புது திட்டம்

4 ஆண்டுகால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும், தொலைதூரக்கல்வி வழியிலும் பயில முடியும். 

4 ஆண்டு இளநிலை படிப்புகளை கொண்டு வர முடிவு செய்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, அதில் சேரும் மாணவர்கள் முதுகலை பயிலாமல் நேரடியாக பிஎச்டி சேரும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படித்தால், முதுகலை பயிலாமல் நேரடியாக பிஎச்டி சேர முடியும். ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன், விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால முதுகலை படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

4 ஆண்டுகால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும், தொலைதூரக்கல்வி வழியிலும் பயில முடியும்.

Must Read : அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்.. புதுச்சேரியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மழலையர்...

4 ஆண்டுகால படிப்பில் சேரும் ஒருவர், எப்போது விரும்பினாலும் பாதியில் படிப்பிலிருந்து வெளியேறி மீண்டும் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.

மத்திய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இத்தகைய புதிய திட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்துகிறது.

ஏற்கனவே நேரடியாக கல்லூரிகளுக்கு செல்லாமல் ஆன்-லைன் வழியில் மாணவர்கள் பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்தை  அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published:

Tags: Post graduate

அடுத்த செய்தி