Medical Counselling | 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.. இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் நடவடிக்கை..
இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: December 2, 2020, 10:28 AM IST
மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்திருந்த இருப்பிடச் சான்றிதழ்களை ஆராய்ந்த சிறப்பு குழுவினர் அனுமதியை ரத்து செய்தனர். மேலும் படிக்க...Silk Smitha Birthday | ’மனம் நில்லுன்னா நிக்காதடி..’ மர்மங்களும், மற்றொரு முகமும்.. சில்க் ஸ்மிதாவின் 60-வது பிறந்தநாள் இன்று..
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணையில் சான்றிதழ்கள் போலி என தெரியவந்தால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்திருந்த இருப்பிடச் சான்றிதழ்களை ஆராய்ந்த சிறப்பு குழுவினர் அனுமதியை ரத்து செய்தனர்.