முகப்பு /செய்தி /கல்வி / தனியார் பள்ளிகளுக்கான நிலுவைத் தொகை : ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு

தனியார் பள்ளிகளுக்கான நிலுவைத் தொகை : ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு

காட்சிப்படம்

காட்சிப்படம்

பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 364 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் வருவாய்க்குக் குறைவாய் உள்ள மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.364 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, தனியார்ப் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. 2021-2022-ஆம் கல்வியாண்டில் தனியார்ப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தின் மூலம், 3 லட்சத்து 98 ஆயிரத்து 393 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Also Read : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - மார்ச் 3 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

இந்நிலையில், தனியார்ப் பள்ளிகளுக்குக் கடந்த ஆண்டு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 364 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாயைத் தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளனர்.

First published:

Tags: Private schools, Tamilnadu govt