சி.பி.எஸ்.இயில் தமிழர்கள் தொடர்பான பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் - வைகோ காட்டம்

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து அறிக்கை விடுத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழர்கள் தொடர்பான பாடங்களை திட்டமிட்டே பாஜக அரசு நீக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சி.பி.எஸ்.இயில் தமிழர்கள் தொடர்பான பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் - வைகோ காட்டம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
  • Share this:
கொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 விழுக்காடு பாடங்கள் குறைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது.

அதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஒன்பது மற்றும் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து "தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி" போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் 'மங்கையராய்ப் பிறப்பதற்கே' எனும் பாடமும் நீக்கப்பட்டுள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

Also read: தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்


மேலும், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள வைகோ, சிபிஎஸ்இ மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சுக்குநூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading