ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளி கல்லூரி மாணவர்கள் அக்டோபர், நவம்பரில் விண்ணப்பிக்கவேண்டிய உதவித்தொகைகள்!

பள்ளி கல்லூரி மாணவர்கள் அக்டோபர், நவம்பரில் விண்ணப்பிக்கவேண்டிய உதவித்தொகைகள்!

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

Scholarship | கோவிட்-19 க்குப் பிறகு, பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் தொற்றுநோயால் இழந்த மாணவர்கள் படிக்க உதவும் வகையில் பல உதவித்தொகைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai |

எல்லாராலும் நினைத்த படிப்பை படித்துவிட முடிவதில்லை.  ஸ்காலர்ஷிப்கள் மற்றும் பெல்லோஷிப் திட்டங்கள் நிதி ரீதியாக மிகவும் வசதியாக இல்லாத திறமையான மாணவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும். சிறந்த கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஒரு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க உதவலாம்.

கோவிட்-19க்கு பிறகு, பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் தொற்றுநோயால் இழந்த மாணவர்கள் படிக்க உதவும் வகையில் பல உதவித்தொகைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள காலத்தில் விண்ணப்பிக்க வேண்டிய மூன்று உதவித்தொகைகள் இங்கே:

1. பள்ளி மாணவர்களுக்கான ஆதித்யா பிர்லா கேபிடல் கோவிட் ஸ்காலர்ஷிப் 2022-23

ஆதித்யா பிர்லா கேபிடல் ஃபவுண்டேஷன் கோவிட்-19 காரணமாக பெற்றோரை(களை) இழந்த 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் இளங்கலை மாணவர்களிடமிருந்து தங்கள் கல்வியைத் தொடர ஆதரவளிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தகுதி:

 • கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோரை(களை) இழந்த இந்திய மாணவர்களுக்கானது.
 • விண்ணப்பதாரர்கள் 1 முதல் 12ம் வகுப்பு மற்றும் இளங்கலை (பொது மற்றும் தொழில்முறை) படிப்புகளில் படிக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த கல்வியைத் தொடர வேண்டும்.

SSC CGL 2022 தேர்வை எதிர்கொள்வது எப்படி! - ஒரு முழுமையான வழிகாட்டல்!

உதவித்தொகை : 60,000 ரூபாய் வரை வழங்கப்படும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10-11-2022

விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே

விண்ணப்பிக்க : www.b4s.in/it/ABCC3

2. GSK ஸ்காலர்ஸ் திட்டம் 2022-23

GSK ஸ்காலர்ஸ் திட்டம் 2022-23, இந்தியாவில் உள்ள அரசு கல்லூரிகளில் முதல் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் தகுதியுள்ள மற்றும் நிதி ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதி:

 • 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் 6,00,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
 • உதவித்தொகை: வருடத்திற்கு 1,00,000 ரூபாய் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15-10-2022

விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே

விண்ணப்பிக்க: www.b4s.in/it/GSKP2

3. விளையாட்டு வீரர்கள் மற்றும் தனிநபர்களுக்கான

கீப் இந்தியா ஸ்மைலிங் ஃபவுண்டேஷனல் ஸ்காலர்ஷிப் மற்றும் மென்டார்ஷிப் புரோகிராம்

கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட் இளம் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி/தொழில்களைத் தொடர வாய்ப்பளிக்கிறது. இந்த உதவித்தொகை திட்டம் தனிநபர்களுக்கு அடிப்படை ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? – இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு கற்பித்தல் அல்லது அவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
 • விளையாட்டு வீரர்கள், கடந்த 2/3 ஆண்டுகளில் மாநில/தேசிய/சர்வதேச அளவில் மாநிலம்/நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டும்.
 • அவர்கள் தேசிய தரவரிசையில் 500-க்குள் / மாநில தரவரிசையில் 100-க்குள் இருக்க வேண்டும். அவர்கள் 9 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
 • உதவித்தொகை: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை ஆண்டுக்கு INR 75,000 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-12-2022

விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே

விண்ணப்பிக்க : www.b4s.in/it/KSSI2

Published by:Ilakkiya GP
First published:

Tags: Scholarship